• Sat. Nov 1st, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

சென்னையில் மோசமடைந்து வரும் காற்றின் தரக்குறியீடு

Byவிஷா

Jan 5, 2025
தலைநகர் சென்னையில் கடந்த 10 நாட்களாக நிலவும் கடும் பனிப்பொழிவுடன் காற்று மாசும் தொடர்ந்து கலந்து வருகிறது. இதன் காரணமாக காற்றின் தரக்குறியீடு மோசம் அடைந்து வருகிறது. 
சென்னையில் நேற்றைய தினம் காற்றின் தர குறியீடு 114 ஆக பதிவாகியுள்ள நிலையில், மிதமான பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. காற்றின் பி.எம். 2.5 நுண் துகள்கள் பெருமளவில் இருப்பதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்.

தற்போது சென்னையில் அதிகபட்சமாக மணலியில் காற்றின் தரக் குறியீடு 197 ஆகவும், அரும்பாக்கத்தில் 158 ஆகவும், பெருங்குடியில் 157 ஆகவும், வேளச்சேரியில் 144 ஆகவும் காற்றின் தரக்குறியீடு 100 கடந்து மோசம் அடைந்துள்ளது. ஆலந்தூர் பகுதியில் மட்டும் காற்றின் தரம் 55 ஆக பதிவாகியுள்ளது .காற்றின் தரம் 100 முதல் 200 க்குள் இருக்கும்போது சிலருக்கு சுவாசிப்பதில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நுரையீரல் பாதிப்புக்குள்ளானவர்கள், ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதய நோயாளிகள் உள்ளிட்டோர் இதனால் பாதிப்படைய வாய்ப்பு இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.