• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆண்டிபட்டியில் முற்றுகையிட்டு போராட்டம்

ராஜகோபலன்பட்டி ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய வளையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் ஜெஜெ நகர், முத்துகிருஷ்ணாபுரம், சத்யா நகர், டிவி ரெங்கநாதபுரம் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி சத்யா நகர் தலைவர் தேங்காய் ராஜா தலைமையில், பொருளாளர் அழகர்சாமி , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர் குழு உறுப்பினர் முனீஸ்வரன் முன்னிலையில் ஏராளமான பெண்கள் உள்பட பலர் இன்று ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்து போராட்டம் நடத்தினர்.

அங்குள்ள அனைத்து தெருக்களையும் சமப்படுத்தி சிமெண்ட் ரோடு அமைத்திடவும், வாய்க்கால் கட்ட வலியுறுத்தியும், அனைத்து தெருக்களிலும் தெருவிளக்குகள் போட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், சாக்கடை நீர் குடி தண்ணீர் கலந்து செல்வதற்கு பதிலாக மாற்று ஏற்பாடு செய்ய வலியுறுத்தியும், ஆண் பெண் இருபாலரும் இலவச கழிப்பிடம் கட்டித்தர வலியுறுத்தி, ரேஷன் கடை அமைக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் தொழிலதிபர் பரமேஸ்வரன், சிபிஐ மாவட்ட செயற்குழு பரமேஸ்வரன், ஏஐடியுசி மாவட்ட பொருளாளர் சென்றாயப்பெருமாள், சிபிஐ ஒன்றிய செயலாளர் பிச்சைமணி, சிபிஐ நகர செயலாளர் முனீஸ்வரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தொடர்ந்து கோஷங்கள் எழுப்பியதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து ஆண்டிபட்டி டிஎஸ்பி தங்க கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் பொதுமக்களை சமாதானப்படுத்தி ஆண்டிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் வேலுமணி பாண்டியன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி, தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவதாக கூறியைதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.