தேனி கானா விளக்கு அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம் நீண்ட நாட்களாக பூட்டியே கிடக்கின்றனர். தனியார் ஹோட்டலில் கூடுதல் விலைக்கு ஏழை, எளிய நோயாளிகள் வாங்கி சாப்பிடும் அவலம்.
தேனி கானா விளக்கு அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம் குறைந்த விலையில் இட்லி சாப்பாடு முடிந்ததை வழங்கி வந்தது. இதனை தேனி கானா விளக்கு அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை, எளிய மக்கள் மற்றும் நோயாளிகள் வாங்கி பயன் அடைந்து வந்தனர்.
இந்த அம்மா உணவகத்தை மூன்று ஆண்டுகளாக இழுத்து மூடிவிட்டனர். இதனால் அரசு மருத்துவமனைக்கு வரக்கூடிய ஏழை, எளிய மக்கள் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் தனியார் ஹோட்டலில் அதிக விலை கொடுத்து சாப்பாடு தோசை, இட்லி, சாப்பாடு உள்ளிட்டவை வாங்கி சாப்பிடும் அவல சூழ்நிலை நிலவி வருகிறது.
எனவே அரசு மருத்துவமனையில் நீண்ட நாட்களாக மூடிக்கிடக்கும் அம்மா உணவகத்தை ஏழை, எளிய மக்கள் பயன்பாடு வகையில் அம்மா உணவகத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.