சிவகங்கை மாவட்டம் அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க மண்டல நிர்வாகிகள் தேர்தல் விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் ராஜன் செல்லப்பா எம் எல் ஏ பங்கேற்றார்.
தமிழகம் முழுவதும் அஇஅதிமுக அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து கழக தொழிற்சங்க மண்டல நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க விருப்ப மனு வழங்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க காரைக்குடி மண்டல நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி சிவகங்கை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.


தேர்தல் பொருப்பாளர்களாக கழக அமைப்பு செயலாளர் ராஜன் செல்லப்பா திருநெல்வேலி அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் ராமையா ஆகியோர் நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்களை வழங்கினார்கள் . இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உமாதேவன், நாகராஜன், மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் இளங்கோவன் தகவல் தொழில்நுட்ப மண்டல செயலாளர் கோபி ஒன்றியச் செயலாளர்கள் கருணாகரன், சேவியர் தாஸ், செல்வமணி, மற்றும் சித்தலூர் பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமான அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.