பிரபல வணிக வளாகத்தில் வாங்கிய மளிகை பொருட்களில் வண்டு புழு நெளிவதாக வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
மதுரை பழங்காநத்தம் அழகப்பா நகர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல வணிக நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் மதுரை ஜெயந்திபுரம் பகுதியை சேர்ந்த காமாட்சி என்பவர் அந்த வணிக நிறுவனத்தில் மளிகை பொருட்கள் வாங்கி உள்ளார். அதை வீட்டில் கொண்டு பார்க்கும் பொழுது வண்டுகள் மற்றும் புழுக்கள் இருப்பதை கண்டு அதிர்ந்து போனார்.




இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனமான சரவணா செல்வரத்தினம் நிர்வாகத்திடம் கூறிய போது, குடுங்கள் வேண்டுமென்றால் பொருட்களை நான் மாற்றி தருகிறேன் என அலட்சிய போக்குடன் பதில்கள் சொன்னதாக குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். குழந்தைகள் முதல் முதியோர்கள் வரும் சாப்பிடும் உணவுப் பொருட்களில் இவ்வாறு தரம் இல்லாமல் விற்பனை செய்யும் நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும் தயாரிப்பு தேதி பிரிண்ட் செய்யப்படாமல் ஸ்டிக்கரில் ஒட்டி விற்பனை செய்து வருவதாக வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.
இதனால் இவர்கள் விற்பனையாகாமல் இருக்கும் பல சாமான்களை சிலருக்கு இவர்களாக தேதியை மாற்றி கலாவதி தேதி கடந்தும் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டை முன் வைக்கின்றன. இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உரிய வகையில் நடவடிக்கை எடுத்து பிரிண்டிங் இல்லாத காலாவதி தேதி இல்லாத உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து அளிக்க வேண்டும் எனவும், இது போன்ற செயல்களில் மீண்டும் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், எச்சரிக்கை விடுக்க வேண்டும் எனவும் கடுமையான அபராதம் விதித்து இது போன்ற சம்பவங்கள் இனி வருங்காலங்களில் நடக்காத அளவுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள, பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.





