• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இந்த 10 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை… வானிலை மையம் எச்சரிக்கை

ByP.Kavitha Kumar

Dec 26, 2024

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர வடதமிழக கடலோரப் பகுதிகளில் நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. மேலும் சென்னையில் இரவு முழுவதும் பரவலாக விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.

வங்கக்கடலில் நிலவும் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக படிப்படியாக வலுவிழக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வருகிற 31-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை உள்பட 10 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.