• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மதுரையில் 24 மணி நேர விமான சேவை தொடக்கம்

Byவிஷா

Dec 19, 2024

மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர விமான சேவையின் தொடக்கமாக மதுரை – சென்னைக்கு இரவு 10.45 மணிக்கு இயக்கப்படுகிறது என விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை விமான நிலையம் கடந்த அக்டோபர் 1-ம் தேதி 24 மணி நேரமும் செயல்படும் என இந்திய விமான நிலையம் அறிவித்தது. இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல் கட்டமாக நாளை (டிச., 20) முதல் மதுரையில் இருந்து இரவு 10:45 மணிக்கு மேல் கடைசி இண்டிகோ விமானம் சென்னைக்கு புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே சென்னையில் இருந்து 8.45 மணிக்கு வந்து மீண்டும் மதுரையிலிருந்து 9 மணிக்கு கடைசி விமானம் சென்றது. 24 மணி நேர சேவைக்கு பிறகு முதல் விமானமாக சென்னையிலிருந்து 9.25 மணிக்கு புறப்பட்டு இரவு 10.20 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறது.
பின்னர் மீண்டும் பயணிகளுடன் 10.45-க்கு மேல் மதுரை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு 12.05 மணிக்கு சென்னையை சென்றடைகிறது. இதன்பின், இரவு சுமார் 2.15 மணிக்கு மேல் பினாங்கிற்கு புறப்பட்டு செல்கிறது. இதற்கு முன்பு இரவு 9.05 மணிக்கு மேல் மதுரையில் இருந்து விமான சேவை இல்லை என்றும், 24 மணி நேர சேவையின் முதல் கட்டமாக பார்க்கப்படுகிறது எனவும் விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.