ஃபெஞ்சல் புயல் காரணாமாக கனமழையாலும், பெரு வெள்ளத்தாலும் விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்ட நிலையில், சேதமடைந்த அனைத்து வீடுகளுக்கும் உரிய நிவாரணம் வழங்ககோரி அதிமுக சார்பில் டிசம்பர் 21ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“விவசாயிகளின் பயிர்களுக்கான உரிய நிவாரணத் தொகையையும் திமுக அரசு வழங்கவில்லை. இதைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரண உதவிகளைவழங்க வலியுறுத்தியும், விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் டிச.21-ம் தேதி காலை 10 மணியளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.