• Wed. Sep 17th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ஜெனகை மாரியம்மன் கோவிலில் நடிகர் கஜராஜ் சாமி தரிசனம்

ByKalamegam Viswanathan

Dec 18, 2024

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தந்தை நடிகர் கஜராஜ் சாமி தரிசனம் செய்தார்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தந்தை கஜராஜ் சாமி தரிசனம் செய்தார் இன்று மதியம் 11 மணி அளவில் கோவிலுக்கு வந்த அவர் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து உற்சவரை வழிபட்டு சாமி தரிசனம் செய்தார். அப்போது அர்ச்சகர் சண்முகம் அவருக்கு பிரசாதம் தந்து மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கஜராஜ்..,

ஜெயா டிவி நேயர்களுக்கு வணக்கம் மார்கழி மாதம் பிறந்ததால் கோவிலுக்கு வந்தோம் நண்பர்களை பார்க்க வந்திருக்கிறோம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழா காலத்தில் வந்தால் மிகப் பிரமாண்டமாக இருக்கும் முக்கியமாக தீச்சட்டி பால்குடம் விமர்சையாக நடைபெறும் இன்று எனது நண்பர் மோகன் இருக்கிறார் அவரைப் பார்க்க வந்திருக்கிறேன். கோவிலில் வந்து சினிமா இன்டஸ்ரி பற்றி கேட்கிறீர்கள்

சினிமா இண்டஸ்ட்ரி இன்று நல்ல நிலைமையில் உள்ளது படித்தவர்கள் அதிகம் வருகிறார்கள் industry பெரிய அளவில் போய்க்கிட்டு இருக்கு முன்பு போல இல்லை இன்று மிகப்பெரிய இன்டஸ்ட்ரியாக மாறி வருகிறது சின்ன சின்ன படங்கள் நிறைய வருது புதுசு புதுசா ஆட்கள் வருகிறார்கள் திறமை உள்ளவங்க நிறைய வராங்க இன்டஸ்ரி வளர்றதுக்கு இது பெரிய வாய்ப்பா இருக்குன்னு கருதுகிறேன்.

மேலும் இன்று கதைக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது பெரிய மாறுதலா இருக்கு.

முன்னாடி எல்லாம் ஹீரோவுக்கு எண்ட்ரியா முக்கியத்துவம் கொடுத்தார்கள் ஆனால் இன்று கதை நன்றாக இருந்தால் மக்களிடம் போய் சினிமா சேர்கிறது அது நல்ல விஷயம்.

எனக்கான வாய்ப்பு என் பையன் கார்த்திக் சுப்புராஜ் மூலமாக வந்தது. இது எனக்கு பெருமையா இருக்கு வாய்ப்பு வந்த பிறகு என் நடிப்பு எல்லோருக்கும் பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன் அதனால தான் எல்லாரும் என்னை கூப்பிட ஆரம்பித்தார்கள்.

அம்மா அப்பா புண்ணியத்தில் நூறு படம் நடிச்சிருக்கேன். அதுக்கு மேலேயும் போயிட்டு இருக்கு மக்களிடையே பிரபலமா ஆயிட்டு இருக்கேன்தான் நினைக்கிறேன்.

ஏன்னா நிறைய பேர் என்னிடம் வந்து போட்டோ எடுத்துக்கிறாங்க நடிப்பு பத்தி பேசுறாங்க.

மீடியாக்கள் தான் இதற்கு காரணம் மக்களிடம் எங்களை கொண்டு போய் சேர்த்ததில் மீடியா பங்கு முக்கியம். அவர்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன். என் மகன் கார்த்திக் சுப்புராஜ் பற்றி நான் சொல்வதைக் காட்டிலும் மக்கள் அதிகம் பேசுகிறார்கள் நல்ல டைரக்டர். அவனின்படங்கள் நல்லா இருக்கு என்று மக்கள் பேசும்போது மகிழ்ச்சியாக இருக்கு. ஏனென்றால் காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு தான்.

நான் என் பையனை பேசுவதை விட மக்கள் நல்ல டைரக்டர், நல்ல படங்கள் எடுக்கிறார் என்று கூறும் போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது இவ்வாறு பேசினார்.