கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா தேவாலய திருவிழா சிறப்பு திருப்பலியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் பங்கேற்றர்
கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருத்தலம் 9-ம் நாள் திருவிழா நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ.மகேஷ் கலந்து கொண்டு அலங்காரம் உபகார மாதாவுக்கு மலர் மாலை அணிவித்து பிரார்த்தனை செய்தார்.


கோட்டார் மறைமாவட்ட ஆயர் முனைவர் நசரேயன் சூசை, கன்னியாகுமரி தேவாலயம் பங்கு தந்தை அருட்பணி உபால்ட் ஆகியோரிடம் ஆசி பெற்ற மேயர் மகேஷ்க்கு பங்கு தந்தை உபால்டு. கன்னியாகுமரி அலங்கார மாதா மற்றும் ஆலையம் சார்ந்த வண்ணப் படங்கள் அடங்கிய புத்தாண்டு காலண்டெரை வழங்கினார்.

நிகழ்வில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு, கன்னியாகுமரி பேரூராட்சி மன்ற தலைவர் பேரூர் கழக செயலாளர் குமரி ஸ்டீபன் மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் இன்பம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொன்.ஜாண்சன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர்.
