21 ஆம் நூற்றாண்டு சர்வதேச பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவன் சுஜன் சிங் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்றார்.
இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் (SGFI) நடத்திய தேசியஅளவிலான கராத்தே போட்டியில் அண்டர் 14 அளவில் கலந்து கொண்டு எங்கள் பள்ளி மாணவன் சுஜன் சிங் வெற்றி .தேசிய அளவிலான கராத்தே போட்டி பஞ்சாப்பில் உள்ள லூதியானாவில் டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற்றது. ஒன்பதாம் வகுப்பு மாணவன் சுஜன் சிங் அண்டர் 14 அளவில் கலந்து கொண்டு மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.

வெற்றி பெற்ற மாணவனுக்கு தால் விந்தர் சிங் (SGFI ஒருங்கிணைப்பாளர் பஞ்சாப்)வெண்கல பதக்கம் அணிவித்து பாராட்டினார். நிறுவனர் சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் மாணவனை பாராட்டி வாழ்த்து கூறினார்.

அத்துடன் பள்ளி அறங்காவலர் அம்மா ராணி சத்தியமூர்த்தி, முதன்மை முதல்வர் விவேகானந்தன் , முதல்வர் சங்கீதா ,துணை முதல்வர் அருணா தேவி மற்றும் கனி , தலைமை ஆசிரியை சாரதா, வகுப்பு ஆசிரியர் சாய் நர்மதா மற்றும் அனைத்து ஆசிரியர்களும் வாழ்த்தி பாராட்டினர்.
