சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மானாமதுரை சிஎஸ்ஐ செவித்திறன் குறையுடையோர் உயர்நிலைப் பள்ளியில் மாணவர் மாணவிகளுக்கு அசைவ உணவுகள் வழங்கப்பட்டது.
மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி தலமையில் ,மாவட்ட துனை செயலாளர் முருகேஸ்வரி சரவணன், மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளர் சரவணன் ஆகியோர் ஏற்பாட்டில் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் குரு முருகானந்தம், மாவட்ட விவசாய அணி செயலாளர் விளாக்குளம் பாக்கியம், ஆகியோர் முன்னிலையில் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்
மாவட்ட விவசாய அனி அவை தலைவர் அக்ரிமுத்து, கிழக்கு ஒன்றிய செயலாளர் நெப்போலியன், மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேஸ்பாபு, ஒன்றிய கழக துனை செயலாளர் பொன்முத்து ராமலிங்கம், வர்தக அனி செயலாளர் மோகன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி சசிகுமார், ஊராட்சி கழக செயலாளர் சுந்தரபாண்டி, நகர் இனை செயலாளர் ராமலிங்கம், நகர் பொருளார் சிவசாமி, வழக்கறிஞர் பிரிவு துனை செயலாளர் சுரேஸ், சுற்றுபுற சூழல் மாவட்ட செயலாளர் ராஜசேகர், மேற்கு ஒன்றிய கழக துனைசெயலாளர் அமுதா, நகர் கழக பொருளார் சிவசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
