• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

பழங்குடியின மாநில சங்க தலைவர் முன்னாள் எம்எல்ஏ டில்லி பாபு பேட்டி…

ByKalamegam Viswanathan

Dec 8, 2024

பரவை சத்தியமூர்த்தி நகரில் பழங்குடியின மாநில சங்க தலைவர் முன்னாள் எம்எல்ஏ டில்லி பாபு பேட்டி அளித்தார்.

ஜனவரி முதல் வாரத்தில் 5000 இந்து காட்டு நாயக்கர் சமுதாய மக்களை திரட்டி, மதுரை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.

ஐந்து பேர் கொண்ட குழு அமைத்து, சாதி சான்றிதழ் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என அமைச்சர் மூர்த்தி பேசியது கடும் கண்டனத்திற்குரியது என தமிழ்நாடு பழங்குடியின மாநில சங்க தலைவர் முன்னாள் எம்எல்ஏ டில்லி பாபு எச்சரிக்கை விடுத்தார்.

மதுரை பரவை சத்தியமூர்த்தி நகர் பகுதியில் இந்து காட்டு நாயக்கர் சாதி சான்றிதழ் கேட்டு போராடி வரும் மக்களை சந்தித்து, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் டில்லி பாபு அவர்களிடம் பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது..,

மதுரை பரவை சத்தியமூர்த்தி நகர் பகுதியில் உள்ள காட்டுநாயக்கர் சமுதாய மக்கள் இன சான்றிதழ் கேட்டு கடந்த ஒரு மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் மூர்த்தி உட்பட மக்களுக்கு வாக்குறுதி அளித்து இருக்கின்றனர். விசாரணை செய்து அளிப்போம் என்று அதைப்போல அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பாக, தமிழ்நாடு அரசுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வருக்கும் வலியுறுத்துவது அரசாணை வெளியிட்ட அரசாணை 104 ன் படி பெற்றோர்களுக்கு இனச் சான்று இருந்தால் பிள்ளைகளுக்கும் தர வேண்டும் என்ற அரசாணை உடனடியாக அமல்படுத்தபட வேண்டும்

ஏறக்குறைய 10 வருவாய் கோட்டாட்சியர் மதுரையிலே ஆயிரக்கணக்கான பழங்குடியினற்கு குறிப்பாக இந்து காட்டுநாயக்கனார் பழங்குடியினருக்கு இனச்சான்று வழங்கப்பட்டிருக்கிறது.

சத்தியமூர்த்தி நகரிலே பெற்றோர்களுக்கு இருந்தும் அவர்கள் பிள்ளைகளுக்கு தர மறுப்பது எதனால் இன்றைக்கு பதவியில் இருக்கக்கூடிய வருவாய் கோட்டாட்சியர் திட்டமிட்டு இந்த மாவட்டத்திலே பழங்குடியின மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

காட்டுநாயக்கனார் மக்களுக்கு மட்டுமல்ல மலைவாழ் மக்களுக்கும்
இனச்சான்று வழங்க மறுக்கிறார். பக்கத்தில் இருக்கக்கூடிய திருமங்கலத்தில் காட்டுநாயக்கருக்கும் அதே போல மழை வேடனுக்கும் இனச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் துரதிஷ்டம் மதுரையில் இருக்கக்கூடிய வருவாய் கோட்டாட்சியர் வழங்க மறுக்கிறார். மாவட்ட ஆட்சியர் இதற்கு துணை போகிறார் அல்லது மாவட்ட ஆட்சியர் கண்டும் காணாதது போல் இருக்கிறார் என தெரியவில்லை

ஆகவே இந்த கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்வதெல்லாம், புயல் வெள்ளத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் எல்லாம் நிறைவு பெறுகிற கட்டத்தில் ஜனவரி மாதத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பாகவும், இங்குள்ள இந்து காட்டு நாயக்கர் பழங்குடி அமைப்பின் சார்பாகவும், மதுரை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மிக பிரம்மாண்ட போராட்டத்தை நடத்த காத்திருக்கிறோம் போராட்டத்தை துவக்க இருக்கிறோம்.

சாதி சான்றிதழை கையில் பெறும் வரை அந்தப் போராட்டம் ஒரு வார காலம் ஆனாலும் அல்லது ஒரு மாத காலம் ஆனாலும் சரி போராட்டம் தொடரும். சாதி சான்றிதழோடு தான் எங்கள் மக்கள் இந்த சத்தியமூர்த்தி நகருக்கு திரும்புவார்கள் என்பது உறுதி.

அந்த அடிப்படையில் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடிய அனைத்து தலைவர்களையும் கலந்து தேதி முறைப்படி அறிவிக்கப்படும். ஜனவரி முதல் வாரத்தில் இந்த போராட்டத்தை தொடங்குவோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்

மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சியர்.., பழங்குடியினர் மக்களுக்கு துரோகம் இழைக்கக் கூடிய செயலை ஒருபோதும் இந்த மாவட்டத்திற்கு செய்ய வேண்டாம்.

டாக்டர் அம்பேத்கர் எழுதியுள்ள அரசியல் சாசன உரிமையை மதுரை மண்ணிலே மீண்டும் ஒரு போராட்டத்தை நடத்தக்கூடிய இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைச்சர் வந்து பேச்சுவார்த்தை நடத்திய போது 5 பேர் கொண்ட குழு அமைத்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிச் சென்றார் என்ற கேள்விக்கு..,

ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கும் நடவடிக்கைக்கு கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறேன். அமைச்சர் இதுக்காக ஐந்து பேர் கொண்ட குழு அமைச்சது கடுமையான கண்டனத்திற்குரியது.

புதிய பகுதியிலே புதுசா ஆய்வு செய்ய வேண்டும் என்றால் ஐந்து பேர் கொண்ட குழு ஆறு பேர் கொண்ட குழு அமைத்து ஆய்வு செய்து யார் பழங்குடி யார் தாழ்த்தப்பட்டோர் யார், யார் மற்ற சமூகத்தினர் என்றெல்லாம் விசாரித்து வாருங்கள் என்று சொல்லுங்கள். அதை ஏற்றுக் கொள்கிறோம்

இவர்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறியவர்கள் அரசாங்கமே குடியேற வைத்திருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு ரெக்கார்டில் இந்து காட்டு நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்று ரெக்கார்டு ஆகி உள்ளது. இவர்களுக்கான ஒதுக்கீடு தேர்தல்லயும் எஸ்டி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. பல்லாயிரம் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கையில் மீண்டும் ஒருமுறை நாங்கள் புதுசா சத்தியமூர்த்தி நகரில் உள்ள ஜாதியை விசாரணை செய்கிறோம், ஆய்வு பண்றோம் என்பது எந்த விதத்தில் நியாயமானது.

மரியாதைக்குரிய மாண்புமிகு அமைச்சர் இப்படி ஐந்து பேர் கொண்ட குழு அனுப்புறதெல்லாம் இந்த மக்களை ஏமாற்றுகிற செயல் இன்னும் சொல்லப்போனால் இந்த மக்களை அலைக்கழிக்கும் செயல். வேறு ஏதாவது ஒரு அறிக்கையை பெற்று திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில செய்ததைப் போல் உண்மையான பழங்குடியின மக்கள் இல்லைன்னு சொல்லி அதிகாரிகளை சொல்ல வைத்து அதுக்கான ரெக்கார்டுகளை தயார் பண்ணி அந்த மக்களை அடியோடு அழிப்பது அதற்கான வேலையாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். அதற்கு ஒருபோதும், ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

அமைச்சர் சொல்லி இருந்தாலும் சரி முதலமைச்சர் அல்லது கலெக்டர் சொல்லி இருந்தாலும் சரி ஐந்து பேர் கொண்ட குழு அமைக்க வேண்டிய அவசியம் என்ன?

யாரு குழு அமைக்க சொன்னாங்க 10 பேருக்கு சான்றிதழ் வழங்குவதற்கு அவர்கள் பெற்றோருக்கு உள்ள சான்றுகளை பார்த்து வழங்க வேண்டியது தானே. அதை தானே நாங்கள் கேட்கிறோம் அதுக்கு குடு அதுக்கு விசாரணை பண்ணு ஒட்டுமொத்தமா இந்த ஜாதியே இருக்குதா, இல்லையா இந்த மக்கள் இருக்காங்களா, இல்லையா எத்தனை ஜாதி இருக்காங்க என்றெல்லாம் விசாரணை செய்ய சொன்னது யாரு உத்தரவு போட்டது யாரு? மாண்புமிகு அமைச்சர் இதை பரிசிலனை செய்யணும்

பழங்குடியின மாநிலத் தலைவர் என்ற முறையில் முதல்வரை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு..,

கட்டாயமாக முதலமைச்சரை சந்திப்பேன் இந்தத் துறையின் உயர் செயலாளர் தலைமைச் செயலாளரை சந்திப்பேன். இந்த சத்தியமூர்த்தி நகர் பழங்குடியின மக்களுக்கு பிரச்சனை தீர்வதற்கு எந்தெந்த அதிகாரிகளை சந்திக்க வேண்டுமோ வலியுறுத்த வேண்டுமா அந்த அதிகாரிகளை எல்லாம் சந்தித்து விட்டு தான் இந்த போராட்டத்தில் உட்காருவேன்

மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்த போராட்ட குழுவிடம், மாவட்ட ஆட்சித் தலைவர் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினால் உங்கள் சமுதாயத்தில் ஏற்கனவே அரசு பணியில் உள்ளவர்களின் சாதி சான்றிதழை விசாரிக்க நேரிடும் மிரட்டினார்கள் என பொதுமக்கள் கூறியதாக கேட்ட கேள்விக்கு..,

தமிழ்நாட்டில் இருக்கிற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வருவாய் கோட்டாட்சியர்கள் நீங்கள் எங்கு படித்தீர்கள்? எப்படி படித்தீர்கள்? எப்படி பரீட்சை எழுதினீங்க எப்படி சாதி சான்றிதழ் கேட்டு பெற்றீர்கள் இதெல்லாம் ஆய்வு பண்றோம்னு சொன்னா இந்த அரசு அதிகாரிகள் தாங்குவார்களா ஏற்கனவே சான்றிதழ் வழங்கியாச்சு

அவங்க அவங்க கல்வி மூலம் வேலை வாய்ப்பு பெற்று இருக்காங்க. நீ வந்து புதுசா விசாரணை பண்ணி எதுக்கு கொடுக்கணும். ஏற்கனவே சான்றிதழ் பெற்றவர்களை ஒழித்து விடுவோம் உங்களை வேலையில் இருந்து எடுத்து விடுவோம் என மிரட்டுவது மாவட்ட ஆட்சியருக்கு அழகா? இது சம்பந்தமாகவே மாவட்ட ஆட்சியரை ஒரு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

நான் கேட்கிற கேள்விக்கு அவங்க பதில் சொல்லணும். யாருக்கு சர்டிபிகேட் கேட்கிறோமோ அவர்களுக்கு உண்டு அல்லது இல்லை என சொல்ல வேண்டியது தானே?

ஏற்கனவே 20 வருடத்திற்கு முன்பு வாங்கி இருக்கிறோம். வேலைக்கு போனவர்களை அவர்களை விசாரிப்பது எந்த வகையில் நியாயம் சட்டத்தில் ஏதும் இடம் இருக்கிறதா?

மதுரை மாவட்ட ஆட்சியர் தாண்டி தான் தோன்றித்தனமாக செயல்படுகிறார். இன்னும் சொல்லப்போனால் பழங்குடியின மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தான் மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை வருவாய் கோட்டாட்சியர் நடந்துகிறார்கள் கட்டாயம் இது தலைமைச் செயலாளர் உட்பட முதலமைச்சர் இடம் ஆழமாக வலியுறுத்துவோம் இவ்வாறு கூறினார்.