• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

இளம் தொழில் முனைவோர்களின் வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும்

Byகுமார்

Dec 2, 2024

இளம் தொழில் முனைவோர்களின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் என தமிழக ஆளுநர் RN ரவி தெரிவித்தார்.

மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இளம் தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக ஆளுநர் R.N. ரவி பங்கேற்று இளம் தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடினார்.

முன்னதாக கருத்தரங்கில் பேசிய தமிழக ஆளுநர் R.N. ரவி, 7000 ஆண்டு பழமையான நகரநாகரிகம் தொட்டு பாரம்பரியம் மிக்க மதுரை மாநகரத்தில் வணிகம் தலைசிறந்து காணப்படுகிறது என்றும் அதுவும் தூங்காநகரம் என்று அழைக்க படுகிறது என்றும் கூறினார்.

மேலும், உலக நாடுகள் இந்தியாவின் தலைமை துவத்தை உற்று நோக்கி வருகிறது என்ற அவர். இளைய தலைமுறையின் புதிய வியூகங்கள், தொழில்துறையில் முன்னேற்றம் அடைகின்றனர் என்றும், இளம் தலைமுறையினர் தங்களது திறன்களை மேம்படுத்தி கொள்ளும்பட்சத்தில் சவால்களை துணிச்சலுடன் எதிர்கொள்வதால் மனஅழுத்தம் என்பதை முழுவதும் கட்டுப்படுத்தலாம் என்றும் கூறினார்.

தனிமனித முன்னேற்றம் சமுதாய முன்னேற்றமாகி தொடர்ந்து நாட்டின் முன்னேற்ற பாதையாக அமையும் என்ற அவர், ஆலமரத்தின் சிறு விதை பெரும் மரமாகும் என்பதை போல இளம் வயதினரின் தனிமனித முன்னேற்றம் நாட்டை முன்னேற்றம் அடைய செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் கலந்துரையாடலின் போது தொழில் முனைவோர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு பதில் அளித்த அவர்.

அரசின் திட்டங்கள், செயல்முறை உள்ளிட்டவைகள் அடங்கும். பிரதமர் தலைமையில் அறிவிக்கப்படும் வளர்ச்சி திட்டங்கள் சமத்துவ பொருளாதாரம் அடைய வழி வகுக்கும் என்றும் அவர் கூறினார்.

அக்னி வீரர் திட்டத்தின் மூலம் 6 வருடம் ராணுவத்தில் பணியாற்றும் வாய்ப்பை இந்திய மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இளைஞர்கள் இளம் வயதினர் ஒழுக்கம். உடல் ஆரோக்கியம், நேர்மையான சிந்தனை வளர்க்கவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

அதேபோல் கேலோ இந்தியாவும் இளைஞர்கள் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள பெரும் பங்கு வகிக்கிறது. இதன் மூலம் இளைஞர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க உதவுகிறது,

ரஷ்யா உக்ரைன், ஹமாஸ் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நடைபெறும் போர் பதற்றம் நிகழ்காலத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியா வன்முறைக்கு எதிரான நிலைப்பாட்டில் தான் இருக்கும் என்றும் கூறிய ஆளுநர். இளம் தொழில் முனைவோர்களின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் என்றும் தெரிவித்தார்.