மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் உசிலம்பட்டி தொகுதியில் எம்எல்ஏவாக பதவி வகித்தவர் சந்தானம். இவர் பார்வர்ட் பிளாக் கட்சியின் அகில இந்திய பொறுப்பிலும்,மாநில பொறுப்பிலும் பதவி வகித்தவர். இவரது 6ம்ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று மேலபெருமாள்பட்டி கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நடந்தது. இவரது மகன்கள் அகில இந்திய பார்வர்ட் பிளாக் நிர்வாகிகள் கள்ளர்கல்விக் கழக தலைவர் பாலகிருஷ்ணன், முன்னாள் யூனியன் தலைவர் இளங்கோ மற்றும் குடும்பத்தினர் உள்பட பேரக்குழந்தைகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து பூஜைகள் செய்தனர்.

இதில் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், அகில இந்திய பார்வர்ட் பிளாக் தமிழக பொதுச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ கதிரவன், திமுக ஒன்றிய செயலாளர் சுதாகரன், இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் சிவஇளங்கோ, வாலாந்தூர் பார்த்திபன் ஊராட்சி மன்ற தலைவர்கள் பானாமூப்பன்பட்டி மகாராஜன், சக்கரப்பநாயக்கனூர் ஜென்ஸி சுப்பிரமணியன், விக்கிரமங்கலம் கலியுகநாதன், எட்டூர் கமிட்டி நிர்வாகி ஜெயபால், சிபிஎம் செயலாளர் முருகன், திமுக மாவட்ட பிரதிநிதிகள் சசிகுமார், ரெட்டியபட்டி பால்பாண்டி, பார்வர்ட்பிளாக்கட்சி நிர்வாகிகள் தலைவர் முத்துராமலிங்கம், ஆர்கே சாமி, செல்லம்பட்டி யூனியன் துணை தலைவர் மணிகண்டன், வக்கீல் இளையரசு, மதுரை மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் எல்எஸ்பி விக்னேஷ் உட்படமாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள், உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கதேவர் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் முன்னாள் தலைவர் மாசாணம், டாக்டர் சந்திரன் உள்பட பலர முன்னாள் எம்எல்ஏ சந்தானம் நினைவிடத்தில் மரியாதை செய்தனர். இங்கு நடந்த நினைவேந்தல் கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் ரெட்காசி வரவேற்றார். இப்பகுதி கிராம மக்கள் கலந்து கொண்டனர். விக்கிரமங்கலம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.
