எல்லா அரசியல் கட்சி தலைவர்களுக்கும், அரசுக்கு தலைமை தாங்க வேண்டும் என்ற எண்ணம் வருவது இயற்கை தான். அதைப் போலத்தான் திருமாவளவனுக்கும் வந்துள்ளது. சிவகங்கையில் கார்த்திக் சிதம்பரம் பேட்டி.
சிவகங்கையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கார்த்தி சிதம்பரம் இவ்வாறு கூறினார். மேலும், அரசுத்துறை வளாகங்களுக்குள் நடந்த தாக்குதலை தடுக்க வேண்டியது காவல்துறைதான் என்றும், பள்ளி மற்றும் நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்த மக்களுக்கு அச்சம் ஊட்டக்கூடிய தாக்குதலுக்கான விளக்கத்தை அரசு கட்டாயம் அளிக்க வேண்டும் என்று கூறினார்.
அதானி குழுமம் குறித்த எந்த குற்றச்சாட்டிற்கும் மத்திய அரசு செவி சாய்க்காதது வேதனை அளிப்பதாக தெரிவித்த கார்த்திக் சிதம்பரம், அமெரிக்க அரசு நிறுவனமே குற்றச்சாட்டை முன் வைத்துள்ளதால் மத்திய அரசு அதானி விவகாரத்தில் முழு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதிமுகவை பொறுத்தவரை அக்கட்சியில் மெகா தலைவர் இல்லாததால் குழப்பம் நிலவுவதாக தெரிவித்தவர் அது இயற்கை தான் என்றும் கூறினார்.