• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

எப்படி இருக்கிறது ‘கங்குவா’ திரைப்படம்..?

Byவிஷா

Nov 14, 2024

ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம் இன்று பல சிக்கல்களைத் தாண்டி வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
தொழில்நுட்பமாகவும், 3டி காட்சிகளும் அற்புதமாக இருப்பதாக ஆடியன்ஸ் தெரிவிக்கின்றனர். படத்தில் வலுவான கதை இருந்தாலும் முதல் பாதி சற்று தொய்வாக நகர்வதாகவும், ஆனால் இரண்டாம் பாதி பரபரப்பாக நகர்வதாகவும் கூறுகின்றனர். பல இடங்களில் அடிக்கடி பலரும் கத்திக் கொண்டே இருப்பது சற்று அயற்சியை தருவதாக உள்ளதாகவும் கருத்துகள் வெளியாகியுள்ளது.
படத்தில் சர்ப்ரைஸான சில கேமியோக்கள் உள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது. படத்தின் பின்னணி இசையிலும், கதாப்பாத்திரங்களை அழுத்தமாக பதிவு செய்வதிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்பது பலரது எண்ணமாக உள்ளது. சூர்யாவுக்கு அழுத்தமான கதாப்பாத்திரம் என்றாலும், மற்ற கதாப்பாத்திரங்கள் மனதில் நிற்கும் அளவு காட்சிப்படுத்தப்படவில்லை என்பதை ரசிகர்கள் ஒரு குறையாக தெரிவிக்கின்றனர். மொத்தமாக கங்குவா அதன் கதை மற்றும் 3டி தொழில்நுட்பத்திற்காக ரசிக்கலாம் என்ற கருத்து உள்ளது