• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

பெட்ரோல் குண்டு வீசியதில் கல்லூரி மாணவர் கைது

ByKalamegam Viswanathan

Nov 4, 2024

சோழவந்தானில் பெட்ரோல் குண்டு வீசியதில் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் சங்கங் கோட்டை தெருவை சேர்ந்த முத்தையா வயது 49 என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாதவன் என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பொங்கல் பண்டிகையன் போது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கிராமத்தின் முக்கியஸ்தர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி உள்ளனர். அதன்பின்னர்மாதவனுக்கு ஆதரவாக சித்தடி தெருவை சேர்ந்த மதன்குமார் வயது 25 என்பவர் ஆதரவாக செயல்பட்டதால் முத்தையாவிற்கும் மதன்குமாருக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் தீபாவளிக்கு முதல் நாள் முத்தையாவிற்கும் மதன்குமாருக்கும் தகராறு நடந்துள்ளது. அங்கு வந்த உறவினர்கள் இருவரையும்சத்தம் போட்டு அனுப்பி உள்ளனர் இதனை தொடர்ந்து கல்லூரியில் படிக்கும் முத்தையாவின்மகன் விக்னேஸ்வரன் வயது 19 குவாட்டர் மது பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி மதன்குமார் வீட்டு முன்பாக எரிந்து விட்டு சென்றுள்ளார். இதில் வீட்டின் திரை மற்றும் குடை எரிந்து உள்ளது.
அதிர்ஷ்ட வசமாகஇதில் யாருக்கும் காயம் ஏற்படாமல் மயிரிழையில் உயிர் தப்பி உள்ளனர். இது குறித்து மதன்குமார் சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் வந்து விசாரணை செய்தனர். சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த கல்லூரி மாணவர் விக்னேஸ்வரனை கைது செய்து, மேற்கொண்டு அவரிடம் விசாரணை செய்து வருகிறார். சோழவந்தானில் முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.