சோழவந்தான் பேரூராட்சியில் தீபாவளி அன்று தேங்கிய குப்பைகளை அகற்றும் பணிகள் தீவிரம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைவீதிகளில் தேங்கிய குப்பைகளை அகற்றும் பணிகள் நடைபெற்றது. சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய கடை வீதி சின்ன கடைவீதி ஜெனகை மாரியம்மன் கோவில் வட்ட பிள்ளையார் கோவில் மார்க்கெட் ரோடு மருது மஹால் ஆகிய பகுதிகளில் தீபாவளி திருநாளை முன்னிட்டு வர்த்தக நிறுவனங்களின் முன்பாகவும் கடைவீதிகளிலும் தேங்கிய குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் துப்புரவு பணியாளர்களை கொண்டு அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. எந்த ஒரு இடத்திலும் குப்பைகள் தேங்காதவாறு கூடுதல் பணியாளர்களைக் கொண்டு குப்பைகள் அகற்றப்பட்டது. இதில் பேரூராட்சி தலைவர் எஸ். எஸ். கே. ஜெயராமன் துணைத்தலைவர் லதா கண்ணன் செயல் அலுவலர் செல்வகுமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மேற்பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினர்.