• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மாவட்ட அளவிலான தடகளப் போட்டி

ByP.Thangapandi

Oct 28, 2024

மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் கே.பெருமாள்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் மாநில விளையாட்டுப் போட்டிக்கு தேர்வு பெற்றனர். 

2024- 2025 ஆம்ஆண்டின் மதுரை வருவாய்  மாவட்ட தடகளப்போட்டிகள் ஆயுதப்படை மைதானத்தில்  நடைபெற்றது.

மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில்   உசிலம்பட்டி அருகே உள்ள கே.பெருமாள்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள்  8 பேர்கள்  ஈரோட்டில் நடைபெறும் மாநில போட்டிக்கு  தேர்வு பெற்றுள்ளனர் .

தடகள  விளையாட்டுப் போட்டியில் 14 வயது பிரிவு  மாணவிகள் மித்ரா  வட்டு எறிதலில்  இரண்டாம் இடமும்  செளமியா  400 மீ  ஓட்டம்  இரண்டாம் இடமும்  4×100 மீ  தொடரோட்டம்  மூன்றாவது இடம்  17 வயது  பிரிவு மாணவன் எம்.ஜீவா 800 மீ  முதல் இடம்  ஆதிகேசவன்  200 மீ  முன்றாம் இடம்  17 வயது மாணவர்கள் 4×400 மீ, தொடரோட்டம்  முதல் இடம் ஜீவா ஆதி  சுந்தர்    ஜெகன்  4×100 மீ  இரண்டாம் இடம்         சூபர்த்தியன்  ஆதி, ஜெகன்  ஜீவா  ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை  கே. பெருமாள்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சோ.சா சரவணகுமார் மற்றும் உடல்கல்வி ஆசிரியர் இராஜேந்திரன் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் வாழ்த்தினார்.