மாமன்னர் மருதுபாண்டியர்களின் 223வது குருபூஜை விழாவில் திமுக சார்பில் சிவகங்கை நகர் மன்ற தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சிவகங்கை சீமையை 1780 முதல் 1801 வரை ஆட்சி செய்த அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டு இந்திய சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம் செய்த சாதி, மத, பேதம் அற்ற மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 223வது குருபூஜை விழா சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு சிவகங்கை நகர் திமுக சார்பாக சிவகங்கை நகர் மன்ற தலைவர் மாமன்னர் மருது பாண்டியர் வாரிசுதாரர் சி.எம்.துரைஆனந்த் மற்றும் சிவகங்கை தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமையில் 10 மேற்பட்ட வாகனங்களில் வந்து மாமன்னர் மருதுபாண்டியர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

மேலும் இவர்களுடன் நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன் வீனஸ் ராமநாதன், அயூப் கான்,ராமதாஸ் வீர காளை, சரவணன் ராஜபாண்டி, செந்தில்வேல் பாண்டி, மற்றும் வட்டக்கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர், அனைத்து நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.









