சிவகங்கை மாவட்டத்தில் அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை முறையாக உறுப்பினர்களிடம் சென்றடைந்ததா என்று அதிமுக அமைப்பு செயலாளர் கே.சீனிவாசன் ஆய்வு செய்தார்.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை இளையான்குடி மானாமதுரை காளையார்கோவில் ஆகிய ஒன்றியம், நகர், பேரூர், பகுதியில் புதிதாக அதிமுக சார்பில் வழங்கப்பட்ட உறுப்பினர் அடையாள அட்டைகள் முறையாக வழங்கப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்ய எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்தார். அதனை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் கழக அமைப்பு செயலாளர் ஏகே.சீனிவாசன் ஆய்வு செய்தார். நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் குணசேகரன், நாகராஜன், நகர செயலாளர் ராஜா,மாவட்ட கவுன்சிலர் மாரிமுத்து, அவைத்தலைவர் பாண்டி, முன்னாள் கவுன்சிலர் பரமேஸ்வரிமாரிமுத்து, நகர வர்த்தக அணி செயலாளர் கண்ணன், மருத்துவரணி நகர செயலாளர், சிவகுருநாதன், பகுதி செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் நகர ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
