சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது .
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ஒன்றிய கவுன்சிலர் பசும்பொன் மாறன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். சந்தான லட்சுமி ராஜமாணிக்கம் வண்டிக்காரராசு வார்டு கவுன்சிலர் முள்ளை சக்தி கிராமத் தலைவர் ராஜமாணிக்கம் பள்ளி மேலாண்மை குழுவினர்மற்றும் மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் உதவி தலைமை ஆசிரியை நன்றி கூறினார்.
