• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

வலுப்பெற்ற ஆழந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி…

Byகாயத்ரி

Nov 18, 2021

வங்கக்கடலில் கடந்த 13-ந் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்போது மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்கக்கூடும். தெற்கு ஆந்திரா – வட தமிழ்நாடு கடற்கரை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக காலையில் மழை சற்று குறைவாக காணப்பட்டாலும், பிற்பகலில் மழை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.