• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொதுமக்கள் அருப்புக்கோட்டை சாலையில் சாலை மறியல்

ByKalamegam Viswanathan

Oct 24, 2024

மதுரை வில்லாபுரத்தில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, தினமும் ஸ்பீக்கர்களில் பாடல் ஒளிபரப்ப போலீசார் தடை விதித்ததை கண்டித்து, பொதுமக்கள் அருப்புக்கோட்டை சாலையில் சாலை மறியல் செய்ய வந்தனர்.

அதனை தொடர்ந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்த கீரைதுறை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

காவல் நிலையத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சேர்ந்து முற்றுகையிட்டனர்.
அதனை தொடர்ந்து அவனியாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் லிங்கபாண்டியன், கீரைத்துறை காவல் நிலைய ஆய்வாளர் கோட்டைச்சாமி மற்றும் தெற்கு வாசல் சரக உதவி ஆணையர் ரமேஷ் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விதிமுறைக்கு உட்பட்டு பாடல்களை ஒளிபரப்ப வேண்டும் என கூறினர்.

அதனை தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு பின் பெண்கள் சமாதானம் அடைந்து கிளம்பினர்.