நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் நிறைவுபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மூன்று நாட்களாக நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் நிறைவு பெற்றது. மாணவர் மற்றும் மாணவியருக்கான 14 வயது 17 வயது 19 வயது பிரிவில் மொத்தம் 48 அணிகள் கலந்து கொண்டன. அதில் மாணவியருக்கான போட்டிகளில், 14 வயது பிரிவில் தூத்துக்குடி செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், காயல்பட்டினம் எல்கே மெட்ரிக் பள்ளி இரண்டாமிடமும், 17 வயது பிரிவில் மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், தூத்துக்குடி செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும், 19 வயது பிரிவில் தூத்துக்குடி செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், செக்காரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும் பெற்றனர். மாணவர்களுக்கான போட்டிகளில் 14 வயது பிரிவில் தருவைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும், 17 வயது பிரிவில் காயல்பட்டினம் எல்கே மேல்நிலைப்பள்ளி முதலிடமும், தருவைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும், 19 வயது பிரிவில் காயல்பட்டினம் எல்கே மேல்நிலைப்பள்ளி முதலிடமும், தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும் பெற்றனர்.வெற்றி பெற்ற அணிகளுக்கு நாசரேத் புனித லூக்கா நர்சிங் கல்லூரி முதல்வர் சோபியா ஞானமேரி சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார். மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் உடற்கல்வி ஆய்வாளர் பால்சாமி, புனித லூக்கா நர்சிங் கல்லூரி விரிவுரையாளர் கரோலின் ஞானசெல்வி, மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், கணினி ஆசிரியர் செல்வின் பொன்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். கால்பந்து போட்டிகளின் நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் பிரைட்டன் ஜோயல், ஜமால், தர்மர், சாத்ராக், ஆல்பன், டிக்சன் ஆகியோர் பணியாற்றினர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் சுதாகர் தலைமையில், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ணதாசன் வழிகாட்டுதலின்படி, உடற்கல்வி ஆசிரியர்கள் தனபால், சுஜித்செல்வசுந்தர், ஓவியக்கலை ஆசிரியர் அலெக்ஸன் கிறிஸ்டோபர், ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.
