• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

6வது சர்வதேச யோக சாம்பியன்ஷிப் போட்டி

BySeenu

Oct 14, 2024

ஸ்ரீலங்காவில் நடைபெற்ற 6வது சர்வதேச யோக சாம்பியன்ஷிப் போட்டியில் கோவை பிராணா யோகா மையத்தில் பயிற்சி பெறும் 10 பேர் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.

கோவை சரவணம்பட்டி, சித்தாபுதூர் ஆகிய பகுதிகளில் செயல் பட்டுவரும் கோவை பிராணா யோகா மையத்தி்ல், யோகாவை தொடர் பயிற்சிகள் வாயிலாக வழங்குவதுடன் ,தேசிய, சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு, அதில் சாதனை படைக்கவும் ஊக்கம் அளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்டர்நேஷனல் யூத் யோகா பெடரேஷன், ஸ்ரீலங்கா யூத்யோகா பெடரேஷன் , இந்தியன் யோகா அசோசியேஷன் மற்றும் கோவை பிராணா யோகா மையம் ஆகியோர் சார்பாக சர்வதேச அளவிலான யோகா சேம்பியன்ஷிப் போட்டி ஸ்ரீலங்கா நகரில் நடைபெற்றது. இதில் கோவை பிராணா யோகா மையத்தின் நிறுவனர்கள் ஜெயலட்சுமி,மோகன்ராஜ் ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டனர். இந்தியா, துபாய், அமெரிக்கா, இந்தோனேஷியா, மஸ்கட், சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த யோகா வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட இதில்,கோவை பிராணா யோகா மையத்தை சேர்ந்த 10 பேரும் தங்க பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வென்று அசத்தியுள்ளனர். மேலும், அங்கு நடந்த கல்சுரல் போட்டியில் இரண்டு பேர் வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளனர். பதக்கங்கள் பெற்று கோவை திரும்பிய வெற்றியாளர்களுக்கு கோவை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இது குறித்து, கோவை பிராணா யோகா மைய நிறுவனர்கள் ஜெயலட்சுமி, மோகன்ராஜ் ஆகியோர் கூறுகையில்.., தற்போது உடல் ஆரோக்கியம்,மன அழுத்தத்தில் இருந்து விடுபட என பலர் எங்களது பிராணா யோகா மையத்திற்கு வருவதாகவும், ஆனால் இது போன்று வருபவர்கள் தேசிய, சர்வதேச போட்டிகளிலும் ஆர்வமுடன் கலந்து கொள்வதாகவும், ஆசிரியர்களாக பயிற்சி பெற்று சேவையாற்ற விரும்புவதாகவும் தெரிவித்தனர். மேலும், இது போன்று போட்டிகளில் கலந்து கொண்டு வெல்வதால் யோகா குறித்த ஆர்வம் மற்றும் விழிப்புணர்வு உலகெங்கிலும் மக்களிடம் அதிகரிப்பதாக தெரிவித்தனர். பிராணா யோகா மையத்தில் பயற்சி பெற்று பதக்கம் வென்ற பலரும் பள்ளி கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி எல்லா வயதினரும் குறிப்பாக பெண்களும் எண்ணற்றோர் என்பது பெருமைக்குரியது என்பதை தெரிவித்துள்ளனர், இதற்கு முன்பு அந்தமான், துபாய், தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளில் நடந்த யோகா போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வாங்கி குவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.