• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

விமான சாகச நிகழ்வில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம், அரசு வேலை வழங்க வேண்டும்-எஸ்.பி வேலுமணி பேட்டி…

BySeenu

Oct 8, 2024

சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி இன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக கோவை குனியமுத்தூர் பேருந்து நிலையம் முன்பு முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கண்டன பதாகைகளை ஏந்தி கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி வேலுமணி..,
அனைத்து தரப்பு மக்களுக்கும் 100% உயர்வு என்பதை பொருத்து கொள்ள முடியாதது எனவும் வருடா வருடம் உயர்வு என்பது மக்களை பாதிக்கும் எனவும் தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பிலும் மக்களை கருத்தில் கொண்டு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்டணத்தை உயர்த்தவில்லை என்றார். மின் கட்டண உயர்வால் கோவையில் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, எனவும் மத்திய அரசு, மாநில அரசு தலையிட்டு தொழில்களை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். போதைப்பொருளை தடுக்க வேண்டும். சாலைகள், பாலங்கள், அத்திக்கடவு உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை கொடுத்தார் என்றார்.

சென்னை விமான சாகசம் உயிரிழப்புகள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர் பாதுகாப்பிற்கு கூடுதலாக கவனம் கொடுத்திருக்க வேண்டும் எனவும், காவல்துறை விழித்திருக்க வேண்டும் எனவும், வேலைவாய்ப்பு, கூடுதலான நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றார்.