• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து, அதிமுக-வினர் மனித சங்கிலி போராட்டம்

ByP.Thangapandi

Oct 8, 2024

உசிலம்பட்டியில் திமுக அரசின் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விலை உயர்வை கண்டித்து அதிமுக வினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் விடியா திமுக அரசின் விலைவாசி உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு மதுரை சாலையிலிருந்து பேரையூர் சாலை வரை அதிமுக நகரச் செயலாளர் பூமாராஜா தலைமையில் நகர்மன்ற தலைவர் சகுந்தலா முன்னிலையில் விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் எம்எல்ஏக்கள் நீதிபதி, தவசி,
நகர பேரவைச் செயலாளர் வழக்கறிஞர் லட்சுமணன் , நகர நிர்வாகிகள் வேல் காட், கே. எஸ். லட்சம், அலெக்ஸ் ,செல்வராஜ், பிரபு , ராமமூர்த்தி, டெய்லர் கணேசன், எஸ். ராஜா ,லேத் ரவி,மோகன், குமார், ராமதுரை ,பிரகதீஸ்வரன், குணசேகரபாண்டி, ஆண்டி, அடைக்கலம் ,ஒன்றிய நிர்வாகிகள் சந்திரசேகர்,சுப்பிரமணி உள்ளிட்ட100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.