தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா, ஜெயமங்கலத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, “அரசு வேலைக்காக 21 ஆண்டுகளாக அலைந்து கொண்டிருக்கிறேன். ஆட்சியர்களிடம் மட்டும் 164 மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை” என்றார்.
“164 மனுக்களுக்கும் உயர்நீதிமன்ற ஆணைக்கும் பலனில்லை.” என் தாத்தா கந்தசாமிக்குச் சொந்தமான நிலத்தை 1976-ல் ஆதிதிராவிடர் நலத்துறைக்காக அரசு எடுத்துக் கொண்டது. நிலத்தை அளித்தவரின் வாரிசுக்கு அரசு வேலை தருவதாக முன்னுரிமை மற்றும் உறுதி சான்று அளித்திருந்தனர்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் வழக்கம் போல மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று (அக்டோபர் 7) நடந்தது. இக்கூட்டத்திற்கு வந்த தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, “அரசு வேலைக்காக 21 ஆண்டுகளாக அலைந்து கொண்டிருக்கிறேன். ஆட்சியர்களிடம் மட்டும் 164 மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை” என்றார்.
தேனி கலெக்டர் அலுவலகம், இது குறித்து நம்மிடம் பேசிய திருநாவுக்கரசு, “என் தாத்தா கந்தசாமிக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை 1976-ல் ஆதிதிராவிடர் நலத்துறைக்காக அரசு எடுத்துக் கொண்டது. அதில் ஆதிதிராவிடர்கள் 20 பேருக்குத் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டது.
அப்போது நில உரிமையாளருக்கு எவ்வித தொகையும் கொடுக்காமல் நிலத்தை அளித்தவரின் வாரிசுக்கு அரசு வேலை தருவதாக முன்னுரிமை மற்றும் உறுதி சான்று அளித்திருந்தனர்.
ஆனால் அரசு வேலை கொடுக்கவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டு எவ்வித நடவடிக்கையும் இல்லை. சென்னை உயர் நீதிமன்றத்தை 2017-ல் நாடினேன். கடந்த 2019-ல் 8 வாரத்திற்குள் மனுதாரரின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து முன்னாள் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரனும் பரிந்துரைத்தார். தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆகியவையும் அரசு வேலை வழங்கப் பரிந்துரைத்தது.
இருந்த போதிலும் அரசு வேலை வழங்கவில்லை. இதற்கிடையே நிலத்தின் உரிமையாளரின் திருமணம் ஆகாத மகனுக்குத்தான் அரசு வேலை வழங்கப்படும் எனக் கூறப்பட்டது.
அரசு வேலையைப் பெற்றே தீரவேண்டும் எனத் தினந்தோறும் அரசு அலுவலகங்களுக்கு அலைந்து திரிந்ததால், என் திருமணம் வாழ்வும் முறிந்தது. தற்போது நான் எவ்வித வாழ்வாதாரமும் இன்றி தனியாக வாழ்ந்து வருகிறேன்.
அம்மாவை வைத்துக் கொண்டு தனியாக இருக்கிறேன். கூலி வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறேன். ஆனால் நான் கடந்த 21 ஆண்டுகளாக அரசு வேலைக்காகப் போராடி வருகிறேன். தேனி மாவட்ட ஆட்சியர்களிடம் 164 முறை மனுக்கள் அளித்துள்ளேன். ஒன்று அரசு வேலை வழங்க வேண்டும் இல்லையெனில் என் தாத்தா அளித்த நிலத்திற்குப் பதிலாக மாற்று இடம் வழங்க வேண்டும் என்றார்.