தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் தமிழகத்தில் முதல் முறையாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், கேடயம், பதக்கம் வழங்கப்பட்டது
உத்தமபாளையம் ஞானம் அம்மன் கோவிலில் இருந்து ஆனைமலையன் பட்டி பேருந்து நிலையம் வரை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சுமார் 5 கிலோமீட்டர் தூரம் கிரசெண்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் மாரத்தான் போட்டி இன்று காலை 6 மணிக்கு நடத்தப்பட்டது.
இதில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளி மாணவ, மாணவி தேனி மாவட்டத்தில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
நான்கு சுற்றுகளாக நடைபெற்ற மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில் சான்றிதழ், கேடயம், பதக்கம் வழங்கப்பட்டது.
பள்ளி நிறுவனர் இன்ஜினியர் முகமது சுல்தான் மற்றும் பள்ளியின் தாளாளர் இன்ஜினியர் எம். முகமது அபுபக்கர் சித்தீக், உத்தமபாளையம் கவுன்சிலர் முகமது ஆதம், தேனி கவுமாரி அம்மன் பேக்கரி அண்ட் ஸ்வீட்ஸ் நிறுவனர் சுதாகர்
உத்தமபாளையம் பேரூராட்சி தலைவர் முகமது காசிம் ஹாஜி கர்த்தர் ராவுத்தர் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் டாக்டர் அக்பர் அலி உள்ளிட்டவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.