கன்னியாகுமரியில் ரேடியோலிஜிஸ்ட் 6_வது தேசிய மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
கன்னியாகுமரி புனித பீட்டர்ஸ் தேவாலயம் வளாகத்தில். ரேடியோலிஜிஸ்ட் 6_வது தேசிய மாநாட்டின் இரண்டு நாட்கள் நிகழ்வின் முதல் நிகழ்வாக, நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் டாக்டர்.ரன்ஜித் ஜெயசேகரன் தலைமையில் தொடங்கியது.


இந்த நிகழ்வில் துவக்க நிகழ்வாக விருந்தினர்கள் குத்துவிளக்கை ஏற்றி வைத்தனர். விழாவில் சென்னை இரமசந்திரா மருத்துவக் கல்லூரியை சோர்ந்த டாக்டர். பன்னீர் செல்வம், பாண்டிச்சேரியை சேர்ந்த டாக்டர்.முனிரத்தினம், கோவையை சேர்ந்த மருத்துவர் ஜெரால்ட் ஆகியோர் கெளரவிக்கப்பட்டார்கள். நிகழ்வில் செவினார்ரை டாக்டர்.ரன்ஜித் ஜெயசந்திரன் வெளியிட, பாண்டிச்சேரியை சேர்ந்த டாக்டர். முனிரத்தினம் முதல் இதழை பெற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து மேடையில் இருந்த அனைத்து விருந்தினர்களுக்கு செவினார் இதழ்கள் வழங்கப்பட்டது.

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தது.
கன்னியாகுமரி புனித பீட்டர்ஸ் தேவாலயம் வளாகத்தில் 5- தேசிய மாநாடுகள் கடந்த ஆண்டுகளில் வெற்றிகரமாக நடந்தேறியது. அதனை தொடர்ந்து 6_ வது ரேடியோலஜிஸ்ட் தேசிய மாநாட்டில் இந்தியாவின் தென்னக மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றுள்ளது போன்று, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களை சேர்ந்த ரேடியோலிஜிஸ்ட் மாணவ, மாணவிகள் 750_ பேர் பங்கேற்றுள்ளார்கள். இந்த 6_வது தேசிய மாநாட்டில் 150_க்கும் அதிகமான மாணவர்கள் ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட இருக்கிறார்கள். கற்கும் துறை சார்ந்த கலந்துரையுடன், மாணவர்கள் இந்தியாவின் தென் கோடி கன்னியாகுமரியை சுற்றி பார்க்கும் ஒரு சுற்றுலாவகாவும் இந்த நிகழ்வு.


நாகர்கோவிலில் ஜெயசேகரன் மருத்துவமனை மற்றும் ரேடியோலிஜிஸ்ட் பயிற்சி மையம் இணைந்து இந்த தேசிய நிகழ்வை வெற்றிகரமாக நடத்தியுள்ளதின், அடுத்த ‘மைல்’ கல் தான்.இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 6_வது தேசிய மாநாடு என தெரிவித்தார்.
