• Mon. Jan 5th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சிறுமிகள் பாலியல் தொடர்பாக புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்தவர்களின் வீடுகளில் சிபிஐ ரெய்டு

Byமதி

Nov 17, 2021

குழந்தைகளின் பாலியல்ரீதியான வன்முறைகளைப் பொறுத்தவரை, உலக நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில், ஒவ்வொரு 155 நிமிடத்திற்கும், 16 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தை வன்புணர்வுக்கு ஆளாகிறது.


இந்தியாவில் தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின், 2018 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, ஒவ்வொரு நாளும் 109 குழந்தைகள் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள்; பதிவான மொத்த வழக்குகள் 39,827. இந்தப் புள்ளி விவரத்தின்படி, தமிழகத்தில் தினசரி நான்கு குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள்.

இந்தநிலையில், நாடு முழுவதும் சிறுமிகள் பாலியல் தொடர்பாக புகைப்படம் மற்றும் வீடியோக்களை வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தவர்களின் வீடுகளில் சிபிஐ ரெய்டு நடத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக வேடசந்தூர் இளைஞர்கள் வீட்டில் ரெய்டு நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.