திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த நாதாகவுண்டம்பாளையம் பகுதியில் முன்னாள் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினரும் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவருமான என் எஸ் பழனிச்சாமியின் மணிமண்டபத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் செல்வபெருந்தகை பல்லடம் வருகை புரிந்தார். அவருக்கு திருப்பூர் வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் மணிராஜ் சார்பில் பட்டாசு வெடித்து பொன்னாடை போர்த்தி சிறப்பான வரவேற்பு பல்லடம் விவேகானந்தா ஸ்கூல் பஸ் நிறுத்தத்தில் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுடன் வரவேற்பு அளித்து கௌரவிக்கப்பட்டது. இதில் வர்த்தக அணி காங்கிரஸ் தொண்டர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.