தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் மகளிர் சிறுதானிய உணவகம் கடந்த 25-10-2023 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
தேனி மாவட்டம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சிறுதானிய உணவக கட்டிடம் கட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் “மதி” சிறுதானிய உணவகம் திறப்பு விழா நடத்தப்பட்டது.
இதனை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி, தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு திறந்து வைக்கப்பட்டது.
கடந்த ஓராண்டாக செயல்பட்டு வரும் மகளிர் சிறுதானிய உணவகத்திற்கு தேவையான மின்சார வசதி இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் செயல்பட்டு வரும் சிறுதானிய உணவகம் மின்சார வசதியின்றி செயல்பட்டு வருகிறது.