• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மதுரை அருகே கொந்தகை கிராமத்தில் ஸ்ரீ மந்தை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Byகுமார்

Sep 15, 2024

மதுரை அருகே கொந்தகை கிராமத்தில் ஸ்ரீ மந்தைஅம்மன் கோவில் கும்பாபிஷேகம் 12 கருடன் வானத்தில் வட்டமிட கிராம மக்கள் சிறப்பு தரிசனம்…

மதுரை அருகே கொந்தகை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீமந்தை அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜைகள் அமைத்து கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், கோபூஜை மங்கல இசை முழங்க இரண்டாம் கால பூஜை மூன்றாம் கால பூஜை நடைபெற்று மேல தாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டதீர்த்தங்களுடன் கோவிலில் வலம் வந்து விமானத்தில் புனிதநீர் தெளிக்கப்பட்டது அப்பொழுது வானத்தில் 12 கருடன் வட்டமிட்டது இதனை கண்ட பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர் ஸ்ரீ மந்தையம்மன், கன்னிமூல விநாயகர், ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீவராகி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது. பொதுமக்கள் அம்மனின் அருள் ஆசி பெற்றனர். விழா குழுவினர் சார்பில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கோவில் கும்பாபிஷேக விழாவினை கொந்தகை கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.