பல்லடம் நகர அனைத்து கட்சிகளின் சார்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் செஞ்சுரி மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மௌன ஊர்வலம் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. பல்லடம் ஒன்றிய செயலாளர் ஆர்.பரமசிவம் தலைமை தாங்கினார். தோழர் சீதாராம் செஞ்சுரி பணிகளையும் தியாகத்தையும் நினைவு கூர்ந்து அனைத்து கட்சிகளின் சார்பாக தலைவர்கள் உரையாற்றினார்கள். இந்த நினைவஞ்சலி கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகரச் செயலாளர் ராஜேந்திரகுமார், அதிமுக சார்பாக நகரப் பொருளாளர் தர்மராஜன், மறுமலர்ச்சி திமுக நகரச் செயலாளர் பாலசுப்பிரமணியம், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக பரமசிவம், மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக முஜிபுர் ரகுமான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக ஓ. ரங்கசாமி, ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியம், மார்க்சீட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஒன்றிய குழு உறுப்பினர் வைஸ் பழனிச்சாமி, பாலாஜி, ஈஸ்வரன் ஆகியோர் நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.