மதுரை பைபாஸ் ரோடு காளவாசலில் இருந்து நேரு நகர் நோக்கி ஆம்னி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதை மதுரை மேலவாசலை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார். அப்பொழுது கருப்புசாமி கோவில் அருகே வரும் பொழுது பெட்ரோல் ஒழுகி கொண்டே வந்துள்ளது. நேருநகர் பிரதான சந்திப்பில் வரும் பொழுது திடீரென வெடி வெடிப்பது போன்று சத்தம் வெடித்து திடீரென வாகனம் தீ பிடிக்க தொடங்கியது. உடனே அங்கிருந்து ஆட்டோ ஓட்டுனர் மற்றும் அப்பகுதி மக்கள் அருகில் இருந்த கடைகளிலிருந்து குடத்தில் தண்ணீரை எடுத்து அணைக்க முற்பட்டனர். அருகே இருந்த தனியார் டயர் நிறுவனத்தில் இருந்து தீயணைப்பான் மருந்தை அணைக்க முற்பட்டனர். எனினும் தீ எரிந்து கொண்டே இருந்தது. உடனடியாக மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த நிலைய அலுவலர் சுரேஷ் கண்ணா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். துரிதமாக செயல்பட்டு தீய அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சம்பவம் குறித்து இதில் தண்ணீரை எடுத்துக் கொண்டு வரும்பொழுது அப்பகுதி சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முனிராஜ் வயது 55 தடுமாறி விழுந்ததில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை 108 அவசர கால உறுதியில் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மதுரை எஸ். எஸ். காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கைரேகை போலீசார் வாகனத்தை ஆய்வு செய்து வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் பகுதியில் கார் ஒன்று தீப்பிடித்தது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.









