தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும். திமுக பவள விழாவை கொண்டாட இல்லங்களில் திமுக கொடியேற்ற வேண்டும். சிவகாசி மாநகர திமுக கூட்டத்தில் தீர்மானம்…
சிவகாசி மாநகர திமுக நிர்வாகிகள் மற்றும் பொது உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்ட கூட்டம் மாநகர செயலாளர் உதயசூரியன் தலைமையில், மேயர் சங்கீதா இன்பம் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்திட அமெரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. கருணாநிதியின் கையெழுத்தோடு அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிட்ட ஒன்றிய அரசுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாடு துணை முதலமைச்சர் பொறுப்பை வழங்கி, திமுகவினருக்கு புதிய எழுச்சியை உருவாக்கித் தர தமிழக முதல்வர் ஸ்டாலினை கேட்டுக்கொள்ளப்பட்டது. திமுக பவள விழாவை கொண்டாடும் விதமாக திமுகவினரின் ஒவ்வொரு இல்லங்களிலும் திமுக கொடியேற்ற வேண்டும் என்பது போன்ற தீர்மானங்களுடன், 10 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.