மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில் 25வது பட்டம் அளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்வுக்கு கல்லூரி தலைவர் மற்றும் நிறுவனர் எஸ் முகமது ஜலில் தலைமை தாங்கினார். நிர்வாக அதிகாரிகள் எஸ்.எம்.சீனிமுகைதீன் எஸ். எம். சீனி முகமது அலியார் எஸ்.எம்.நிலோஃபர்பாத்திமா முன்னிலை வகுத்தனர். கல்லூரி ஆராய்ச்சி இயக்குனர் எஸ்.எம்.நாசியாபாத்திமா வரவேற்றார். முதல்வர் சிவக்குமார் பட்டமளிப்பு ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். சிறப்ப விருந்தினராக முதன்மை நிர்வாக அதிகாரி மற்றும் பணிய இயக்குனர் ஸ்டாட் ஆப் சிவராஜா ராம்நாத் கலந்து கொண்டு பட்டமளிப்பு உரை நிகழ்த்தி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். கௌரவ விருந்தினராக சென்னை பவான் சைபர் டெக்னாலஜி மென்பொருள் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் பாலகுமார் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். இளநிலை பொரியல் துறைகளில் இயந்திரவியல் துறை சார்பாக 245 சிஎஸ்சி 184 மின்னியல் மற்றும் மின்னணுவியல் 119 மின்னியல் மற்றும் தகவல் தொடர்புத்துறை 177 தகவல் தொடர்புத்துறை 59 கட்டிடவியல் 113 கெமிக்கல் 44 அக்ரி 62 பயோமெடிக்கல் 60 என 1063 மாணவர்கள் பட்டம் பெற்றனர். முதுநிலை பொறியியல் பிரிவில் 63 மாணவர் மாணவிகள் பட்டம் பெற்றனர். சிறப்பு விருந்தினர் சிவராஜா பேசுகையில் மாற்றம் ஒன்றே மாறாதது இப்பொழுது தொழில் புரட்சியில் நாடு உச்சகட்டத்தை அடைந்துள்ளது. மாணவர்கள், மாணவிகள் பட்டம் பெற்றுள்ள நிலையில் தாங்கள் மிக பொறுப்புக்கு உள்ளாகி உள்ளீர்கள். ஐடி புரட்சினாள் கீழ்மட்ட மக்கள் நடுத்தர மட்ட மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. நல்ல தொழில்நுட்பம் நல்ல அறிவு வெளிப்படுத்துவதன் மூலம் வாழ்க்கையில் மிக சிறந்த இடத்தை அடையலாம் என்று பேசினார். தாங்கள் கற்ற அறிவு மூலம் புதிய மாற்றத்தை கொண்டு வரவும் அதனை புது நிறுவனமாக மாற்றவும் பல வசதிகள் அரசால் செய்து தரப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி புது மாற்றங்களை கொண்டு வர பட்டம் பெற்றவர்கள் முன்வர வேண்டும் என்று பேசினார். சிறப்பு அழைப்பாளர் பாலகுமாரன் பேசுகையில் முதலில் பட்டம் பெற்றவர்கள் பெற்றோர்களுக்கும் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கு மற்றும் சமுதாயத்திற்கு நன்றி உள்ளவராக இருக்க வேண்டும். இந்த நாள் தங்களது வாழ்க்கை பயணம் தொடங்குகிறது. அதை சரியாக அமைத்து வெற்றி பெற வேண்டும் என்று பேசினார்.