• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம்! பிள்ளையாரை தரிசனம் செய்து தேங்காய் உடைத்து திரையரங்குக்கு சென்ற ரசிகர் மன்ற நிர்வாகிகள்!

ByG.Suresh

Sep 5, 2024

சிவகங்கை யாழினி சினிமாஸில் விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. முதல் காட்சி காலை 09 மணிக்கு துவங்கியது. ஏராளமான ரசிகர்கள் படத்தை காண்பதற்காக திரையரங்கம் முன்பு குவிந்திருந்தனர். மேளதாளங்கள் முழங்க ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் திரையரங்குக்கு வெளியில் இருந்த பிள்ளையார் கோவிலில் பிள்ளையாரை தரிசனம் செய்து தேங்காய் உடைத்து திரையரங்குக்குள் விஜய் வாழ்க என்ற முழக்கங்களுடன் சென்றுள்ளனர். விஜய் திரைப்படம் யாழினி சினிமாஸ் திரையரங்கில் திரையிடப்பட்டுள்ள நிலையில் அந்தப் பகுதிகளில் முழுவதும் ரசிகர்களின் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு பட்டாசுகள் வெடிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றது. சிவகங்கை நகர் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.