தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா முத்தாலம் பாறை ஊராட்சிக்கு, உட்பட்ட அருகவழி பகுதியில் எலும்பு கூடாக காட்சியளித்து உடைந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்ற விவசாயி கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருக வழி பகுதியில் விவசாய நிலங்களுக்கு மின்சாரம் செல்லக்கூடிய உயர் மின்னழுத்த ட்ரான்ஸ்பார்மர் மின் கம்பம் அமைந்துள்ளது.
இந்த மின்கம்பம் எலும்புக்கூடு போல் காட்சியளித்து எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
உடைந்து விழும் அபாய நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்ற விவசாயி பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை மின்சார மின் கம்பத்தை மாற்றவில்லை.
உடைந்து விழுந்து அபாயம் ஏற்படும் முன்னர் மின்கம்பத்தை மாற்ற வேண்டுமென விவசாயி கோரிக்கை விடுத்துள்ளனர்.