ரோமாபுரியில் பார்க்கும் திசையெல்லாம் வான் தொட முயலும் சிலுவை தாங்கிய தேவாலயங்களாக காட்சி அளிக்குமாம்.
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த “மணப்பாடு”மீனவ கிராமத்திலும் பார்க்கும் திசையெங்கும், தெருவுக்கு ஒரு தேவாலயம் என்ற நிலையில் தேவாலயங்களை கொண்டதால். மணப்பாட்டிற்கு “சின்ன ரோமாபுரி”என்ற பெயர் வெகு காலமாக மக்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ளது.

கன்னியாகுமரியை அடுத்துள்ள கீழமணக்குடி,மேல மணக்குடி என இரண்டு மீனவ கிராமங்களில் காணும் இடமெங்கும் தேவாலயங்களை காணமுடிகிறது.
மேலமணக்குடி பகுதியில் புனித லூர்து அன்னையின் சிறிய குருசடியை அப்பகுதியில் வசிக்கும் மக்களின் நன்கொடைகள் மூலம் சிற்றாலையமாக உருவாக்க திட்டம் இட்டு பணிகள் தொடர்ந்தது.


கால ஓட்டத்தில் சிற்றாலயத்தின் கட்டிட பணிகள் பொருளாதார தடையால், பணிகள் தொடராத நிலையில் அப்பகுதி மக்கள். கலப்பை மக்கள் இயக்கம் தலைவரும், திரைப்பட தயாரிப்பாளருமான பி.டி. செல்வகுமாரிடம் உதவி நாடியதும். ஊர் மக்களோடு இணைந்து தடைப்பட்ட புனித லூர்து அன்னை சிற்றாலய பணிகள் கடந்த மாதம் தொடங்கிய போது.மாதாவின் அருளால் இனி தடையில்லாது சிற்றாலையத்தின் பணியை தொடங்கிய பணி வெகு விரைவிலேயே,சிற்றாலயத்தின் மேற் கூரை கான்கிரீட் பணி நிறைவடையும் என நம்பிக்கையை தெரிவித்தார்.

இன்று ( ஆகஸ்ட்_26)ம் நாள் மேலமணக்குடி பங்கு தந்தை மற்றும் உதவி தந்தையும் இணைந்து ஜெபித்து கான்கிரீட் பணியை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் பி.டி. செல்வகுமார். நாம் அன்று புனித லூர்து அன்னையிடம். பணிகள் தடையின்றி தொடர அன்னையிடம் நாம் எல்லோரும் ஜெபித்தோம். நம் அனைவரது மன்றாட்டு வான் வீட்டில் இருக்கும் அன்னைக்கு கேட்டது.

அருள் தரும் அன்னையின் தாய்மை பாசத்துடன் நமக்கு எவ்விதமான பொருளாதாரம் தடையும் இன்றி பணிகள் தொடர்ந்து. இன்று மேல் கூரை அமைக்கும் கான்கிரீட் பணியை இன்று தொடங்கியுள்ளோம். விரைவில் ஆலைய அர்ச்சிப்பு தினத்தில் இன்று போல் மீண்டும் கூடி புனித லூர்து அன்னைக்கு நன்றி பிரார்த்தனை செய்வோம் என பேசினார் பி.டி.செல்வகுமார். நிகழ்வில் கலப்பை மக்கள் அமைப்பின் உறுப்பினர்கள் மேல மணக்குடி ஊர் மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஊர் தலைவர் ரெம்ஜீசியஸ் அனைவருக்கும் நன்றி கூறினார். கலப்பை மக்கள் அமைப்பின் குமரி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் ஒருங்கிணைப்பு பணியை மேற்கொண்டார்.
