பல்லடத்தை அடுத்த சுல்தான்பேட்டை பிஜேபி கிழக்கு ஒன்றியம் சார்பில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றியம் சார்பில் செஞ்சேரி புத்தூரில் பிஜேபி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
தலைமை ஒன்றிய தலைவர் ரவி என்கிற மந்திரி அப்பன் கூறுகையில்..,
வருகிற 2026 தேர்தலுக்கு இப்பவே நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அண்ணாமலை அவர்களை தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சராக வர பிஜேபியின் சார்பில், வீடு வீடாகச் சென்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்தார். ஆனைமலை நல்லார் திட்டம் விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார். இதில் மாவட்ட தலைவர் சங்கீதா, மாவட்ட விவசாய அணி பொதுச் செயலாளர் தனபாலன், மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட விவசாய அணி செயலாளர் சிவக்குமார், ஒன்றிய இளைஞரணி தலைவர் முருகேசன், செயலாளர் மணிகண்டன், ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 2026க்குள் உறுப்பினர்கள் சேர்க்கை பிஜேபியில் ஒரு கோடி பேர் சேர்க்க வேண்டும் என்றும் காஞ்சிபுரம் பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை தெரிவித்ததாக மாவட்ட பொறுப்பாளர் மாரிமுத்து தெரிவித்தார். கூட்டத்தில் முன்னோர்க்கு மேற்பட்ட பிஜேபி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.