மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் மற்றும் அ.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மறைந்த காவல் உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் ஸ்பைக்கர்ஸ் வாலிபால் கிளப் இணைந்து நடத்தும் மாபெரும் கைப்பந்தாட்ட போட்டியை பள்ளியின் தலைமை ஆசிரியர் வாசிமலை, கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.