100 நாள் வேலை திட்ட பணிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் பணியாளர்களின் வங்கி கணக்கில் இருந்து பெற்று முறைகேடாக ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படுவது உப்பார்பட்டி ஊராட்சியில் தடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், உப்பாரப்பட்டி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட பணிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் பணியாளர்களின் வங்கி கணக்கில் இருந்து பெற்று முறைகேடாக ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.
உப்பார்பட்டி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் பல்வேறு திட்டப் பணிகள் செய்யப்படுகிறது.
குறிப்பாக சிமெண்ட் சாலை, மெட்டல் சாலை, பேவர் பிளாக் சாலை, தடுப்பணை, சாக்கடை, கட்டிட வேலை, உள்ளிட்ட 100 நாள் வேலை திட்டப் பணிகளில் மதிப்பீட்டில் உள்ள தொகையில் 10 முதல் 15 சதவீதம் தொகை 100 நாள் வேலை மக்களுக்கு சம்பளமாக வழங்கப்படும். இந்த சம்பளத்தை 100 நாள் வேலை மக்களிடம் இருந்து திரும்ப பெற்று ஒப்பந்ததாரர்களுக்கு தருவதில்லை.
அப்படி 100 நாள் வேலை திட்ட பணிகளில் கிடைக்க வேண்டிய சம்பளம் சுமார் 20 லட்சம் ரூபாய் வரை பணியாளர்களுக்கு முறையாக வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுத்து முறைகேடாக ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழகம் முழுவதும் ஒப்பந்ததாரர்களே பணிகளை செய்து முடித்துவிட்டு, இதற்காக 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் பணத்தை அவர்களிடம் இருந்து வாங்கி ஒப்பந்ததாரர்கள் பெற்று வருகின்றனர்.








