• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பாலமேட்டில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா

ByN.Ravi

Aug 18, 2024

மதுரை மாவட்டம் பாலமேடுஸ்ரீ மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை 4.00 மணியளவில் சக்தி கொடியேற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உலக நன்மை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் சக்தி பக்தர்கள் குடும்பத்திற்காகவும், கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது கஞ்சி கலயத்துடன் பக்தர்கள், கோவிலிலிருந்து புறப்பாடாகி பஸ் நிலையம் வழியாக விளக்குத்தூண் மற்றும் பெரிய கடை வீதியாக சென்று கோவில் திரும்பினார். கோவில் வாசலில் நின்றிருந்த சக்தி பெண்கள் கலசத்துடன் வருகை தந்த பக்தர்களுக்கு ஆராத்தி எடுத்து பூஜைகள் செய்து வரவேற்றனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார் இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அன்னதானமும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட விழா குழுவினர் செய்திருந்தனர்.