முறைகேடாக கண்மாயில் நாட்டு கருவேல மரங்களை முற்றிலும் வெட்டி, அகற்றி செங்கல் காளவாசல்களுக்கு கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
தேனி மாவட்டம் போடி தாலுகா டொம்புச்சேரி கிராமத்தில் உள்ள டொம்புச்சி அம்மன் கண்மாயில் முறைகேடாக கருவேல மரங்களை முற்றிலுமாக வெட்டி அகற்றி கனி வளங்கள் செங்கல் காளவாசர்களுக்கு கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.
டொம்புச்சேரி கிராமத்தில் சுமார் 25 ஹெக்டர் பரப்பளவில் டொம்புச்சி அம்மன் கண்மாய் அமைந்துள்ளது.
தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு வண்டல்மண் அள்ள தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆனால் கனிம வள கொள்ளையர்கள் கண்மாய்களில் விவசாயிகளின் பெயரில் போலியான அனுமதி பெற்று வண்டல்மண் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது.
இதே போல் டொம்புச்சி அம்மன் கம்மாயில் கடந்த ஒரு வாரங்களாக விவசாயிகளின் பெயரில் முறைகேடாக போலியான அனுமதி பெற்று செங்கல் காளவாசல்களுக்கு கண்மாயில் உள்ள நாட்டு கருவேல மரங்கள் அனைத்தும் வெட்டி அகற்றி கனிவளங்கள் ஜேசிபி, ஹிட்டாச்சி, உள்ளிட்ட கனரக வாகனங்களை கொண்டு அளவுக்கு அதிகமான ஆழத்தில் நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகளில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம், அனுமதி பெற்ற விவசாயிகளுக்கு டொம்புச்சி அம்மன் கன்மாயில் வண்டல் எடுத்துச் செல்லப்படுகிறதா என ஆய்வு நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.