வளைய பந்து விளையாட்டை துவக்கி வைக்கச் சென்ற முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, விளையாட்டு மைதானத்தில் வளைய பந்து வீசி விளையாண்ட நிகழ்வு தற்போது வைரலாகி உள்ளது என்பதுதான் ஹைலைட்டான விஷயமே.

இந்திய திருநாட்டின் சுதந்திர திருநாளை முன்னிட்டு திருத்தங்களில் சிறகுகள் விளையாட்டுப் பட்டறை நடத்தும் 180அணிகள் பங்குபெறும் மாநில அளவிலான வளையப்பந்து போட்டியை விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கழக அமைப்புசெயலாளர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஜோதி ஏற்றி துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து விளையாட்டு வீரர்களுடன் சேர்ந்து வலைய பந்தினை சிறிது நேரம் விளையாடி அசத்தினர்.
இந்நிகழ்வின்போது விளையாட்டை காண வந்த பொதுமக்களும், விளையாட்டு வீரர்களும், கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.
