• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திமுக ஆட்சியில் சுடுகாட்டில் கொட்டகை போடுகிறார்கள்..,முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆவேசம்!

திமுகவுக்கு இது கேவலமாக இல்லையா? திமுகவுக்கு முதுகெலும்பு இல்லை. விருதுநகர் பாராளுமன்றத்தில் மூன்று தடவையும் வெற்றி பெற்ற மாணிக்கம் ஒரு நாள் கூட இதுவரை தொகுதிக்குள் வரவில்லை தொகுதி மக்களுக்கு மாணிக்கம் தாகூர் யார் என்று கூட தெரியாது என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆவேசமாக பேசியது தான் ஹைலைட்டான விஷயமே.

அதிமுக கழக பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான புரட்சித் தமிழர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க சிவகாசி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சியும், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. தொண்டர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கி, கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது..,

“உழைப்பவரே உயர்ந்தவர் என” என்ற தத்துவத்தை சொன்னவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். உழைப்பவர்களுக்கு மட்டுமே அதிமுகவில் இடம் உண்டு. கட்சியை வைத்து பிழைப்பவர்களுக்கு இங்கு இடம் இல்லை. இந்த இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள். திமுகவினருக்கு தற்பொழுது வரட்டு கவுரவம். தங்களை எதிர்ப்பதற்கு ஒரு ஆள் கூட இல்லை என்று ஒரு கட்சி நினைக்கிறதோ அந்த கட்சி அழியப்போகிறது என்று அர்த்தம். திமுகவினர் எங்களுக்கு எதிரியே இல்லை என்று சொல்கிறார்கள். .40 தொகுதிகளும் ஜெயித்து விட்டோம் என்று மார் தட்டுகிறார்கள். திமுகவினர் சிறுபான்மையினர், இஸ்லாமியர், பெண்களுக்கு ரூபாய் ஆயிரம் தருகிறோம் என்று சொல்லி மக்களிடம் ஏமாற்றி ஓட்டு வங்கியை பெற்று விட்டனர். ஆனால் தற்பொழுது அ திமுகவுக்கு எப்படி ஜெயிக்க வேண்டும் என்று தெரிந்து விட்டது.

டெல்லியில் எப்படி பணம் வாங்க வேண்டும் என்று தெரியும். எடப்பாடியார் ஆட்சி செய்த போது அதிகம் சாலைகள், மேம்பாலங்கள் மருத்துவக் கல்லூரிகள் கால்நடை மருத்துவமனையில் ஆரம்ப சுகாதார நிலையம் மினி கிளினிக்குகள் என அனைத்திற்கும் நிதியை பெறவில்லையா?அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்க 7.5 ஐந்து சதவீதத்தை மத்திய அரசிடம் பெற்றுக் கொடுத்தவர் எடப்பாடியார். திமுகவினர் நாங்கள் 40 தொகுதிகளும் வெற்றி பெற்று விட்டோம். இனி பிஜேபி எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று சொன்னவர்கள் தற்பொழுது டில்லியில் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கவில்லை என்று கதறுகிறார்கள். அப்புறம் எதற்கு 40 உறுப்பினர்களும் வெற்றி பெற்று டெல்லிக்கு சென்றார்கள்.சென்னை பெருவெள்ளம், கன்னியாகுமரி, கடலூர் போன்ற பகுதிகளில் வெள்ளம் பாதித்த போது மத்திய அரசிடம் இருந்து எந்த நிதியையும் திமுகவால் பெற முடியவில்லை.

எடப்பாடியார் நான்கு ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்த போது மத்திய அரசிடம் நாங்கள் நிதியை பெற்று வரவில்லையா? அதிமுக 10 வருடம் ஆட்சியில் இருந்த போது, ஒரு பட்ஜெட்டிலாவது தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காமல் இருந்தார்களா? திமுகவுக்கு இது கேவலமாக இல்லையா? திமுகவுக்கு முதுகெலும்பு இல்லை. விருதுநகர் பாராளுமன்றத்தில் மூன்று தடவையும் வெற்றி பெற்ற மாணிக்கம் ஒரு நாள் கூட இதுவரை தொகுதிக்குள் வரவில்லை தொகுதி மக்களுக்கு மாணிக்கம் தாகூர் யார் என்று கூட தெரியாது. , சாட்சியாபுரம், சிவகாசி ரயில்வே கேட் இருக்கன்குடி நீர்ச்சத்தம் பணிகளுக்கு நான் அமைச்சரமாக இருந்த போது தான் நிதியை பெற்று அடிக்கல் நாட்டினேன். ஆனால் இன்று வரை எந்த பணிகளும் நடைபெறவில்லை? சிவகாசிக்காரர்கள் என்ன இளிச்சவாயர்களா? திமுக ஆட்சியில் சுடுகாட்டில் கொட்டகை போடுகிறார்கள். ஆனால் மக்களுக்கு குடி இருக்க வீடு தர மறுக்கிறார்கள். சிவகாசியில் வேன் ஸ்டாண்ட் மற்றும் கோயில்களை இடித்து விட்டு பறவைகள் சரணாலயம் கட்டுவதற்கு திமுக அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

இந்த நிலை நீடித்தால் அ திமுக களத்தில் இறங்கிமக்களுடன் இணைந்து போராடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர் தயாராக இருக்கிறது.சிவகாசி தொகுதிக்கு திமுக அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை வரும் 18 மாதம் திமுகவுக்கு கண்டம் தான் அந்த அளவு மக்கள் திமுக அரசு மீது கொதித்துப் போய் உள்ளனர். மக்களவை தேர்தல், சட்டப் பேரவை தேர்தல் எனப் பிரித்துப் பார்த்து வாக்களிப்பவர்கள் தமிழக மக்கள். இ அவர்களைத் தாண்டி அதிமுக தனது வாக்கு வங்கியை நிரூபித்து உள்ளது.அதிமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்துப் பெண்களுக்கும் பாரபட்சமின்றி மாதம் ரூ.2,500 வழங்கப்படும். மத்திய அரசிடம் இருந்து எப்படி நிதி வாங்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய நல்ல திட்டங்களை நாம் மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. திமுக, தாங்கள் செய்யாத திட்டங்களையும் செய்ததாக விளம்பரப்படுத்தி 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

எதிர்க்கட்சியாக இருக்கும் போது ‘கோ பேக் மோடி’ என்று கருப்பு பலூன் பறக்கவிட்ட திமுக, ஆட்சிக்கு வந்த பின் அமைதியாகி விட்டது. தேசப்பற்று உள்ளவர்கள் அதிமுகவினர். கிரிக்கெட்டில் இந்தியா தோற்றால் கண்ணீர் விடுபவர்கள் அதிமுகவினர். அதையும் கை கொட்டி சிரிப்பவர்கள் திமுகவினர். மத்தியில் ஆளும் கட்சியும், மாநிலத்தில் ஆளும் கட்சியும் நமக்கு தூசு தான். அதிமுகவுக்கு அழிவு என்பதே கிடையாது. 2026-ல் 234 தொகுதகளிலும் வெற்ற பெற்று அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும்” என்று கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் எஸ் கே முத்து பாண்டியன்,மாநில வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் மாரீஸ்வரன் மேற்குமாவட்டஎம்ஜிஆர் மன்ற செயலாளர் பிலிப் வாசு ,மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சையது சுல்தான் ,மாவட்ட கழகத் துணைச் செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், மாநில எம் ஜி ஆர் மன்ற துணைச் செயலாளர் எஸ் என் பாபுராஜ்,மேற்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் வி.ஜி கணேசன்.மேற்கு மாவட்டமருத்துவர் அணி செயலாளர் வி. எம் விஜய் ஆனந்த், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் என் எம் ரமணா, மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுபாஷினி, சிவகாசி வடக்கு ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி வீ.ஆர்.கருப்பசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியராஜ் (மேற்கு ஒன்றிய செயலாளர் லயன் என்றலட்சுமி நாராயணன் ,தெற்கு ஒன்றிய செயலாளர் பாலாஜி, திருத்தங்கல் மேற்கு பகுதி செயலாளர் சரவணகுமார்,திருத்தங்கல்கிழக்கு பகுதி செயலாளர் எம் பி கிருஷ்ணமூர்த்தி, சிவகாசி மேற்கு பகுதி செயலாளர் வீ. கருப்பசாமி பாண்டியன், சிவகாசி கிழக்கு பகுதி செயலாளர் சாம் என்ற ராஜா அபினேஸ்வரன், மேற்கு மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர்கள் எம் எஸ் செல்வகுமரன், எம் கார்த்திக் , மேற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை துணை செயலாளர் அழகர்குமார், மேற்கு மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் கே.டி சங்கர், ,மேற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சிவராஜ், டாஸ்மார்க் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ் குமார், மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பப்பிரிவு செயலாளர் ஆர். பாண்டியராஜன், தலைவர் எம் கே என் செல்வம், ,சிவகாசி மாமன்ற உறுப்பினர் கரைமுருகன், உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.